விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் விழுப்புரம் மண்டலம் சார்பில் விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாரிய உத்தரவு-2, 12.4.2022-ஐ திரும்ப பெற வேண்டும், முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மின்சார தொழிலாளர் சம்மேளன செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். மின்வாரிய கணக்காளர் களப்பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் அன்பழகன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல செயலாளர் சிவராஜ், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், பொறியாளர் சங்க மண்டல செயலாளர் சந்திரசேகரன், பொறியாளர் கழக நிர்வாகி மகாவிஷ்ணு, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநில துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ், ஓய்வுபெற்றோர் சம்மேளன இணை செயலாளர் கோபால், எம்ப்ளாயிஸ் பெடரேஷன் மாநில துணைத்தலைவர் பஞ்சமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினர். இதில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி நன்றி கூறினார்.


Next Story