மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்தெடுக்கும் பணி


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்தெடுக்கும் பணி
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:16:19+05:30)

தென்காசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்தெடுக்கும் பணி கலெக்டர் தலைமையில் நடந்தது.

தென்காசி

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் குறைபாடு உள்ளவை, ஒதுக்கப்பட்ட பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தென்காசி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் வழக்குகளில் தொடர்பில்லாத மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பழனி நாடார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செல்வமோகன் தாஸ் பாண்டியன், தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி, தேர்தல் தாசில்தார் கிருஷ்ணவேல், தென்காசி தாசில்தார் ஆதிநாராயணன், துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, தனித்துணை தாசில்தார் சுடலையாண்டி, அ.தி.மு.க. நகர செயலாளர் சுடலை மற்றும் தேர்தல் வழக்கில் வாதி, பிரதிவாதிகள், அரசியல் கட்சியினர், அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. இதில் 136 எந்திரங்களை தென்காசி தாலுகா அலுவலகத்தில் இருந்து எடுத்து மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் சென்னை முதன்மை தேர்தல் அலுவலர் அறிவுரைப்படி குறைபாடு உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களான சின்னம் ஒதுக்கீட்டு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் என மொத்தம் 28 எந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


Next Story