மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி
x
தினத்தந்தி 25 July 2023 6:45 PM GMT (Updated: 25 July 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கள்ளக்குறிச்சி தச்சூரில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக தச்சூரில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை பெல் நிறுவன பொறியாளர்களை கொண்டு சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதில் மொத்தம் 6,684 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டது. இதன் முடிவில் மொத்தம் 6,509 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது இன்றி இருப்பது தெரிந்தது.

175 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகி இருந்ததால், அவைகள் நிராகரிக்கப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தேர்தல் தாசில்தார் சையது காதர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story