அஞ்செட்டி அருகே குட்டையில் தண்ணீர் குடித்த யானை
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. போதிய மழை பெய்யாதாதல் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் உணவு தண்ணீர் தேடி கிராம பகுதிகளில் அடிக்கடி வந்து பயிர்களை நாசம் செய்கின்றன. அடிக்கடி யானைகள் அஞ்செட்டி ஒகேனக்கல் செல்லும் சாலையில் நின்று கொண்டு பஸ், கார்களை வழிமறிக்கின்றன. வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று அஞ்செட்டி அருகே தொட்டள்ள பகுதியில் உள்ள குட்டையில் 2 யானைகள் தண்ணீர் குடித்து விட்டு சாைலயில் நடந்து சென்றன. அப்பகுதியில் செல்வோர் யானைகளை பார்த்து செல்போன்களில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். யானைகள் சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
Related Tags :
Next Story