தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் குளித்த யானைகள் கூட்டம்


தேன்கனிக்கோட்டை அருகே  ஏரியில் குளித்த யானைகள் கூட்டம்
x
தினத்தந்தி 15 Sep 2022 6:45 PM GMT (Updated: 15 Sep 2022 6:45 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் குளித்த யானைகள் கூட்டம்

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகளவில் உள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் குடிப்பதும், ஆனந்த குளியல் போடுவதும் வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் குள்ளட்டி வனப்பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் காட்டு யானைகள் கூட்டம் குட்டிகளுடன் ஆனந்த குளியல் போட்டன. நீண்ட நேரம் வெயிலுக்கு இதமாக குளியல் போட்ட காட்டு யானைகள் பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

காட்டு யானைகள், மான்கள், காட்டு எருமைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தண்ணீர் தாகத்தை போக்க வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் தேவைகள் தீர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story