தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்; மக்காளச்சோள பயிர் சேதம்


தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்; மக்காளச்சோள பயிர் சேதம்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானை மக்காச்சோள பயிரை சேதப்படுத்தியது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானை மக்காச்சோள பயிரை சேதப்படுத்தியது.

மக்காச்சோள பயிர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கிருந்து உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் அடிக்கடி அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் பகுதியில் வசித்து வருபவர் மகாதேவப்பா (வயது 55). விவசாயி. இவரது தோட்டம் ஊரையொட்டி உள்ளது. இங்கு அவர் தனது 3 ஏக்கர் பரப்பளவிலான தோட்டத்தில் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்துள்ளார்.

சேதப்படுத்திய ஒற்றை யானை

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மகாதேவப்பா தனது தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு மக்காச்சோள பயிர் நாசப்படுத்தப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள தாளவாடி வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் தோட்டத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிரை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியும் சென்றுள்ளது. இதில் 1 ஏக்கர் பரப்பளவிலான பயிர் சேதமானது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும், சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story