பர்கூர் அருகே வனப்பகுதிகளில் மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பதை தடுக்க நடவடிக்கை


பர்கூர் அருகே வனப்பகுதிகளில் மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பதை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 7 April 2023 12:30 AM IST (Updated: 7 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்க மின்வாரியம் மற்றும் வனத்துறையினர் சார்பில் பர்கூர் அருகே மேல்பூங்குருத்தி வனப்பகுதிகளில் தாழ்வாக உள்ள மின் கம்பங்கள், ஓயர்களை மாற்றி வருகின்றனர். இதற்காக மேல்பூங்குருத்தி, குருவிநாயனப்பள்ளி, நல்லமான் சந்தை, காளிகான் ஏரி வனப்பகுதிகளில் கூட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது..

இந்த பணியை வரட்டனப்பள்ளி மின்வாரிய பிரிவு பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்த பணிகளை மேல் பூங்குருத்தி வனப்பகுதியில் கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாய மேரி, செயற்பொறியாளர் (பொது) வேல், போச்சம்பள்ளி கோட்ட பொறியாளர் இந்திரா, பர்கூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜ், வரட்டனப்பள்ளி உதவி பொறியாளர் சுப்பிரமணி, வனக்காப்பாளர் பழனி, வன காவலர் சுப்பிரமணி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story