காரப்பள்ளம் அருகே கார் கண்ணாடியை உடைத்துகாட்டு யானை அட்டகாசம்; 4 பேர் உயிர் தப்பினர்


காரப்பள்ளம் அருகே கார் கண்ணாடியை உடைத்துகாட்டு யானை அட்டகாசம்; 4 பேர் உயிர் தப்பினர்
x

காரப்பள்ளம் அருகே கார் கண்ணாடியை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஈரோடு

காரப்பள்ளம் அருகே கார் கண்ணாடியை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வாகனங்களை வழிமறிக்கும் யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டுயானைகள் காணப்படுகின்றன. இவை உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து வருகிறது. அதேபோல் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு் யானை ஒன்று கடந்த சில நாட்களாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறிப்பதும், வாகன ஓட்டிகளை துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

காரின் கண்ணாடி உடைப்பு

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று தமிழக-கர்நாடக மாநில எல்லையான காரப்பள்ளம் அருகே நேற்று சுற்றி திரிந்தது. அப்போது அந்த வழியாக கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பார்த்ததும் ரோட்டோரம் நின்றிருந்த யானை அங்கு ஓடிவந்தது. பின்னர் காரை வழிமறித்து அதன் முன்பக்க கண்ணாடியை ஆவேசத்தில் தந்தத்தால் குத்தியது. இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதம் அடைந்தது.

உயிர் தப்பினர்

அப்ே்பாது காரில் இருந்த பெண்கள் அச்சத்தில் கூச்சலிட்டபடியே காரை வேகமாக இயக்கினார்கள். இதனால் காரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன்பின்னர் யானை அங்கிருந்து காட்டு்க்குள் சென்றது. யானையால் சிறிது நேரம் காரப்பள்ளம் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பர்கூர்

இதேபோல் பர்கூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு் யானை ஒன்று அந்தியூரில் இருந்து மைசூரு செல்லும் ரோட்டில் தாமரைகரை என்ற இடத்தில் வந்து நின்றது. இதை பார்த்த அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் சற்று தூரத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்.

அதன்பின்னர் ரோட்டில் அங்கும் இங்கும் காட்டு யானை நடமாடியது. இதனை ஒரு சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

சிறிது நேரம் ரோட்டில் சுற்றிய காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து நிலமை சீராகியது. வாகனங்கள் அங்கிருந்து சென்றன. காட்டு யானையால் அந்தியூர்-மைசூரு ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடம்பூர்

குன்றி-கடம்பூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது. மாதேஸ்வரன் கோவில் அருகே சென்றபோது, எதிரே ஒரு காட்டு யானை வந்துகொண்டு இருந்தது. இதனால் பயந்துபோன டிரைவர் வேனை பின்பக்கமாக இயக்கினார். சுமார் 100 அடி தூரம் வேனை நோக்கி வந்த யானை, பின்னர் காட்டுக்குள் சென்று விட்டது.

இதையடுத்து நிம்மதி அடைந்த டிரைவர் வேனை ஓட்டிச்சென்றார்.


Next Story