யானைகள் தாக்கி தொழிலாளி பலி


யானைகள் தாக்கி தொழிலாளி பலி
x

வேப்பனப்பள்ளி அருகே யானைகள் தாக்கி தொழிலாளி பலியானார். மேலும் மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி

யானைகள் தாக்கின

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி எம்.சி.பள்ளி அருகே உள்ள ஏக்கல்நத்தம் மலை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 43). ஆந்திர மாநிலம் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (60). கூலித்தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும் ஆந்திர மாநிலம் குப்பத்தில் வேலைக்கு சென்று நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

ஓ.என்.கொத்தூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தமிழக-ஆந்திர வனப்பகுதியை ஒட்டி 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊருக்குள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது தமிழக வனப்பகுதியில் இருந்து ஆந்திர வனப்பகுதிக்கு சென்ற யானை கூட்டம் திடீரென இவர்களை விரட்டி சென்று தாக்கின. இதனால் அவர்கள் அலறி துடித்தனர்.

தொழிலாளி சாவு

இவர்களின் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு குப்பம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் தொழிலாளி கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். நாகராஜ் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆந்திர மாநிலம் குரிப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story