ராகி பயிரை சேதப்படுத்திய யானைகள்


ராகி பயிரை சேதப்படுத்திய யானைகள்
x
தினத்தந்தி 14 Dec 2022 7:30 PM GMT (Updated: 14 Dec 2022 7:30 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே ராகி பயிரை யானைகள் சேதப்படுத்தி சென்றன.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:-

தேன்கனிக்கோட்டை அருகே ராகி பயிரை யானைகள் சேதப்படுத்தி சென்றன.

யானைகள் அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 3 யானைகள் எஸ்.குருபட்டி கிராமத்திற்குள் புகுந்தன. இந்த யானைகள் வயல்களில் புகுந்து ராகி, சோளம், துவரை பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்கு சென்றன. மேலும் எல்லப்பா என்பவர் ராகியை அறுவடை செய்து களத்தில் குவித்து வைத்திருந்தார். இந்தநிலையில் விவசாயிகள் தோட்டத்திற்கு சென்றபோது யானைகள் பயிர்களை சேதப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ராகியை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வன வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இழப்பீடு

தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை பட்டாசு வெடித்து நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கிராமப்பகுதிகளில் யானைகள் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story