எல்லீஸ் நகர், பசுமலை, வண்டியூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
எல்லீஸ் நகர், பசுமலை, வண்டியூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எல்லீஸ் நகர், பசுமலை, வண்டியூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி
மதுரை எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி. அபார்ட்மெண்ட், டி.என்.சி.பி. அபார்ட்மெண்ட், போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7-வது தெரு வரை, டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ேஹாம் 1 மற்றும் 2-வது தெரு, எஸ்.டி.சி. ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள்.
சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானா, வசந்த நகர், ஆண்டாள்புரம் அக்ரிணி அபார்ட்மெண்ட்ஸ், வசுதரா அபார்ட்மெண்ட்ஸ், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளிவீதி, மேல மாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என மின்செயற்பொறியாளர் மோகன் தெரிவித்தார்.
மின்சாரம் நிறுத்தம்
இதேபோல் பசுமலை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. எனவே, நமசிவாய நகர் 1, 2, 3, 4-வது தெரு வரை, வேல்முருகன் நகர், துரைச்சாமி நகர், அஸ்வினி தெரு, காயத்திரி தெரு, எஸ்.பி.நகர், அருள் நகர், ஜீவன் தெரு, அன்னை மீனாட்சி நகர், மாடக்குளம் முழுவதும், ரோஜா நகர், சொரூப நகர் 1 முதல் 6 தெரு, பிரதிநதி தெரு, சாலினி ெதரு, ஜெகன் அபார்ட்மெண்ட், உதய் அபார்ட்மெண்ட், பெரியார் நகர் 1, 2, 3 தெரு, கந்தன் சேர்வை நகர் 1 முதல் 10 ெதரு உள்ளிட்ட பகுதிகளில் காைல 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என மின்செயற்பொறியாளர் லதா தெரிவித்தார்.
மேலும் வண்டியூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட சங்கு நகர், பழனி முருகன் தியேட்டர் பின்புறம், பி.கே.எம். நகர், சமயன் கோவில், அனுமார்பட்டி, லெட்சுமி நகர், சவுராஸ்டிராபுரம், தாகூர் பள்ளி, மக்கள் மன்றம், அன்ைன பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.