கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
x

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

செங்கல்பட்டு

பாதுகாப்பு ஒத்திகை

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் மறுசுழற்சி ஆலை, முன்மாதிரி அதிவேக ஈனுலை (அணுமின் திட்டம்) மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்ற பிரிவுகள் உள்ளன.

இந்த மையம் அவசர கால தயார் நிலை செயல்முறை சோதனை திட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கதிர்வீச்சு அவசர நிலை ஒத்திகை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் நேற்று நடந்தது. அரக்கோணத்தில் இருந்து வந்திருந்த பேரிடர் மேலாண்மை குழு கமாண்டண்ட் அருண் தலைமையில் அணு கதீர்வீச்சு குறித்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டால் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கோ அல்லது பொதுமக்கள் யாருக்காவது உடலில் கதிர்வீச்சு பரவினால் அவர்களை பாதுகாப்பு கவச உடையுடன் மீட்டு கதிர்வீச்சு அவர்களின் உடலில் எந்த அளவுக்கு பரவியுள்ளது.

கதிர்வீச்சின் தாக்கம்

கதிர்வீச்சின் தாக்கம் அவர்களின் உடல் நிலையை பாதிக்காத அளவில் தடுப்பு முறைகளை எப்படி மேற்கொள்வது, என்பது குறித்து கதிர்வீச்சு பரிசோதனை கருவி மூலம் பரிசோதித்து ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் பேரிடர் மீட்பு படை வீரர்கள் கவச உடை அணிந்து இந்த ஒத்திகையை நடித்து காட்டினர்.

அதேபோல் ஆல்பா கதிர், காமா கதிர், பீட்டா கதிர் என இந்த 3 கதிர்வீச்சுகள் எப்படி நம் உடலில் தனித்தனியாக பரவி உள்ளது என்பதை நவீன கருவி மூலம் கண்டுபிடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கவச உடை அணிந்த வீரர் ஒருவரை நிற்க வைத்து பரிசோதனை நடத்தி கலெக்டருக்கும், பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் பேரிடர் மீட்பு படையினர் விளக்கினர்.

அதேபோல் உடலில் கதிர்வீச்சு பரவி பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் அவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி எப்படி அவர்களை பாதுப்பான முறையில் ஆஸ்பத்திரிக்க்கு அழைத்து செல்வது குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது.

பயிற்சி அளித்தனர்

இந்த பேரிடர் கால அவசரநிலை ஒத்திகையில் கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் சிந்துசெல்கே, மாவட்ட நில எடுப்பு வருவாய் அலுவலர் நாராயணன், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ருக்மாங்கதன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவி காயத்ரி தனபால், ஒன்றிய கவுன்சிலர் ம.தனபால், புதுப்பட்டினம் வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் எஸ்.அப்துல்உசேன் மற்றும் மாவட்ட வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை போலீஸ் துறை, மக்கள் நல்வாழ்வு துறை, தீயணைப்பு துறை, வேளாண்மை துறை, கால்நடை துறை, மீன்வளத்துறை, போக்குவரத்து துறை மற்றும் மக்கள் தொடர்பு துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும் அவசரநிலை காலத்தில் பல்வேறு துறையினர் எப்படி தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று பேரிடர் மீட்பு படையினர் அவர்ளுக்கு விளக்கி கூறி பயிற்சியும் அளித்தனர்.


Next Story