அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தல்


அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தல்
x

அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடையே பேசுகையில், தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் போன்றவைகளில் கழிவறைகள், தண்ணீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொய்வின்றி முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் வாய்க்கால், தெருவிளக்குகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து தங்கள் பகுதிகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, அதனை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் 15-வது நிதிக்குழு மானிய திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும், நிலுவை பணிகளுக்கு நிர்வாக அனுமதியும் வழங்கிட கருத்துரு அனுப்ப வேண்டும். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வீடுகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றார்.


Next Story