பணிபுரியும் பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்


பணிபுரியும் பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்
x

பணிபுரியும் பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்

தாமரைக்குளம்:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மகளிர் மாநாடு அரியலூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மகளிர் துணை குழு மாவட்ட அமைப்பாளர் சிந்தனைச் செல்வி தலைமை தாங்கினார். வேம்பு காந்தி, விக்டோரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பெரியசாமி பேசினார். மாவட்ட செயலாளர் வேல்முருகன் கருத்துரையாற்றினார்.

மாநாட்டில், பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் தொகையை வழங்க வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு அனைத்து அலுவலகங்களிலும் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் பெண்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் துணைப் பொதுச் செயலாளர் வாசுகி, மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். முடிவில் செவிலியர் சங்க மாவட்ட தலைவர் செல்வி நன்றி கூறினார்.


Next Story