8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்- 6 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு


8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்- 6 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
x

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் 6 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்

மதுரை


தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் மதுரை அண்ணா நகர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் உதயகுமார், செய்தி தொடர்பு செயலாளர் தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பல்நோக்கு சேவை மையம் திட்டத்தின் கீழ் தேவையற்ற வேளாண் உபகரணங்கள் வாங்கும்படி கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய குழுவின் அறிக்கையினை விரைவில் பெற்று ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும். சங்கங்களில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். முடிவில் மதுரை மாவட்ட பொருளாளர் பாரூக் அலி நன்றி கூறினார்.


Next Story