மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு
சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் இறந்தார்.
மதுரை
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தை சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் விக்னேஷ் (வயது 25).சோழவந்தான் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். சோழவந்தான் பகுதியில் நேற்று மதியம் முதல் இரவு வரை பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மின்சாரம் தடைபட்டது. சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தடைபட்டது.
இதை சரி செய்ய சென்ற போது காற்றில் வீசிய தென்னை மர ஓலை டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே விக்னேஷ் இறந்தார். இது குறித்து சோழவந்தான் கிராம நிர்வாக அலுவலர் கோபாலகண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story