மின்சாரம் தாக்கி ஊழியர் பலி


மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
x

வேட்டவலம் அருகே மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

வேட்டவலம்

வேட்டவலம் அருகே ஆவூர் கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிபவர் குப்பன் (வயது 52).

இவர் இன்று மாலை திருவண்ணாமலை விழுப்புரம் மெயின் ரோட்டில் உள்ள மின் கம்பத்தில் புதிய மின் இணைப்பு தருவதற்காக ஏறினார். மின் இணைப்பு கொடுக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி குப்பன் படுகாயம் அடைந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மின்கம்பத்தில் இருந்து மீட்டு ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story