ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ஊழியர்கள் உடனடி சஸ்பெண்ட்..!


ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ஊழியர்கள் உடனடி சஸ்பெண்ட்..!
x

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் பணியாளர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை:

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் பணியாளர்களை உடனுக்குடன் தற்காலிக பணி நீக்கம் செய்யுமாறும், அவர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும் கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர், மண்டல பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது,

நியாய விலைக்கடை பணியாளர்கள் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவதை தடுக்க, ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக தகவல் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அரிசி கடத்தல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள நியாயவிலைக் கடைகளில் பறக்கும்படை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நியாயவிலைக் கடைப் பணியாளர்களை உறுதி செய்த பின்னர், அவர்களை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது குற்றச்சாட்டுக் குறிப்பாணை பிறப்பித்து, அப்பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டுமெனவும் கூட்டுறவு சங்க பதிவாளர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story
  • chat