வேலைவாய்ப்பு முகாம்


வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் வேலை வாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியை பெற்ற இக்கல்லூரியை சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனம் நடத்திய வேலை வாய்ப்பிற்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர்.

பணி நியமனம் பெற்ற மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், தமிழ் துறை தலைவர் முருகேசன், தற்போதைய ஒருங்கிணைப்பாளர் டி.சி.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் இணை பேராசிரியர் முருகன், கணினி அறிவியல் துறை தலைவர் சந்திரசேகரன், அழகப்பா அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகமை ஒருங்கிணைப்பாளர் போதகுரு ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story