10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவை இணையதளத்தில் பதிவு செய்யலாம் கலெக்டர் மோகன் தகவல்


10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  வேலைவாய்ப்பு பதிவை இணையதளத்தில் பதிவு செய்யலாம்  கலெக்டர் மோகன் தகவல்
x

10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் மோகன் தொிவித்துள்ளாா்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே மாணவர்கள் நிரந்தர மதிப்பெண் சான்றிதழை பள்ளியில் இருந்து பெற்றவுடன் மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை போன்ற அசல் சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaippu.gov.in-ல் இணையம் மூலமாக அனைவரும் பதிவுசெய்து கொள்ளலாம்.

மேலும் வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள், புதுப்பித்தல் ஆகியவற்றை இ-சேவை மையம் மூலமாகவும் பதிவுசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள், இந்த வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பதிவினை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story