கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும்


கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூர் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 73- வது பிறந்தநாள் விழா, பா.ஜ.க. பேச்சாளர் பயிற்சி பயிலரங்கம் திறப்பு விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.ஏ.டி.கலிவரதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டெடுத்து அந்தந்த கோவில்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மண்டல தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், அரிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், தென்னரசு, வெங்கடேசன், விஜயன், மற்றும் அருள்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் தலைவர் வக்கீல் என்.ஆர்.கே. என்கிற என்.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் டி.கே. முரளி தொடக்க உரையாற்றினார். விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளர் மற்றும் மாநில செயலாளர் வினோஜ். பி. செல்வம் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பா.ஜ.க. தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் தொழிலதிபர் ஆர்.கார்த்திகேயன், தெற்கு மாவட்ட துணை தலைவர் வக்கீல் வசந்த், மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் எரியீட்டி என்.ஏழுமலை, மாவட்ட நிர்வாகிகள் தியாகராஜன், சதாசிவம், தங்கம், வெங்கடேசன், ராமலிங்கம், புவனேஸ்வரி, பார்த்திபன், குபேரன், யமுனாராணி, ராஜலட்சுமி, பரதன், சுகுமார், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் எஸ்.பத்ரிநாராயணன் நன்றி கூறினார்.


Next Story