ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது
மதுரையில் வீட்டு முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர்.
மதுரையில் வீட்டு முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர்.
உதவி பொறியாளர்
மதுரை மாநகராட்சி, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 56-ல் மாநகராட்சி உதவி பொறியாளராக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார் (வயது 52). இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது வீட்டின் முன் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறும், முன்பணமாக ரூ.1000 கொடுக்க வேண்டும் என விஜயகுமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து, கணேசன் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரைப்படி, ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று மாலை அலுவலகத்தில் விஜயகுமார் இருந்தபோது, அங்கு கணேசன் வந்துள்ளார்.
கைது
ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதனை விஜயகுமார் வாங்கியபோது, அங்கு மறைந்து நின்றிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சூரியகலா உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், விஜயகுமாரை கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
==============