திருச்சி: பொதுத்துறை வங்கியில் ஏ.சி. திருடிய என்ஜினீயர் கைது..!


திருச்சி: பொதுத்துறை வங்கியில் ஏ.சி. திருடிய என்ஜினீயர் கைது..!
x

திருச்சி அருகே பிரபல பொதுத்துறை வங்கியில் ஏ.சி எந்திரத்தை பொருத்தி சென்றவரே அதை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி:

திருச்சி பாலக்கரை பகுதியில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கிக் கிளையின் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி. எந்திரத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக வங்கி கிளை மேலாளர் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அங்கு உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தபோது இரவு நேரத்தில் ஒருவர் ஆட்டோவை எடுத்து வந்து ஏ.சி. இயந்திரத்தை கழற்றி எடுத்துச் சென்று இருப்பது தெரியவந்தது.

மேலும் அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 40) மெக்கானிக்கல் என்ஜினியர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஏ.சி. இயந்திரத்தை பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள இந்த வங்கியில் பொருத்தி சென்ற என்ஜினியர் என்பதும் தெரியவந்தது.

பின்னர் பாலக்கரை போலீசார் இதுகுறித்து வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story