ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் என்ஜினீயர் தற்கொலை


ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் என்ஜினீயர் தற்கொலை

கோயம்புத்தூர்

கோவை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கோவை என்ஜினீயர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதியுள்ள கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூக்குப் போட்டு தற்கொலை

கோவை சிங்காநல்லூர் உப்பிலி பாளையம், ஆர்.வி.எல்நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சங்கர் (வயது 29). என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு ஆன்லைன் சூதாட்டம் பழக்கம் இருந்து வந்தது.இதில் லட்சகணக்கான பணத்தை இழந்து கடன் தொல்லையால்அவதி பட்டுவந்தார்.

இந்த நிலையில்இவர் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓட்டல் மேனேஜர் சிவதாசன் காட்டூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் இலங்கேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கடிதம் சிக்கியது

ஓட்டல் அறையில் சோதனை செய்த போது, சங்கர் எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாகவும், அதிக அளவு கடன் உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி வைத்திருந்தார்.

எனவே, அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார்? என்றும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் கோவையில் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story