பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி என்ஜினீயர் தற்கொலை


பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேலை கிடைத்த நிலையிலும் மனஉளைச்சல் காரணமாக பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடிக்கொண்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

கோவை

வேலை கிடைத்த நிலையிலும் மனஉளைச்சல் காரணமாக பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடிக்கொண்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

என்ஜினீயர்

கோவை நஞ்சுண்டாபுரம் அருகே நேதாஜி நகரை சேர்ந்தவர் ராம்கோபால். இவருடைய மகன் ஹயக்கிரிவ ராம் (வயது22). பி.டெக் பட்டதாரி. இவர் சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவர் நேற்று

இதற்கிடையே நேற்று முன்தினம் ஹயக்கிரிவ ராம் தனது பெற் றோரிடம், தலை வலிப்பதால் தனது அறைக்கு தூங்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அவர் அறைக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வர வில்லை. அவருடைய அறைக்கதவு திறக்கப்பட வில்லை.

பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடினார்

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அந்த அறைக்கதவை தட்டியும் திறக்க வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு ஹயக்கிரிவராம் தனது முகத்தை பிளாஸ்டிக் கவரால் முழுவதும் மூடி கழுத்தை சுற்றி கயிறு கட்டியப்படி மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், விரைந்து வந்து ஹயக்கிரிவ ராமை பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் போலீசார் விரைந்து வந்து ஹயக்கிரிவ ராமின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, ஹயக்கிரிவ ராமிற்கு மூளையில் கட்டி இருந்து உள்ளது.

அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். மேலும் அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கான உத்தரவு வந்து இருந்தது. ஆனால் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றனர்.


Next Story