தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை
வெள்ளியணை அருகே தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயர்
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள ஓந்தாம்பட்டியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 57) விவசாயி. இவருடைய மகன் நவீன் குமார் (24). என்ஜினீயர். இவர் கோயமுத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இந்தநிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஒரு மாதமாக சொந்த ஊரான ஓந்தாம்பட்டிக்கு வந்து தனது வீட்டில் நவீன்குமார் தங்கி இருந்தார்.. மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலைக்கு செல்ல முடியவில்லையே என்ற மன உளைச்சலில் அவர் இருந்து வந்துள்ளார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை உள்பக்கமாக தாழ்பாள் போட்டு, தூங்க சென்ற நவீன்குமார் விடிந்தும் எழுந்து வரவில்லை. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் வீட்டின் கொக்கியில் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து இறக்கி பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.