வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 36). வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி இளவரசி (30) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவர், வடசென்னை அனல்மின் நிலைய குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் குடியிருப்புக்கு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள், அரிகிருஷ்ணனின் குடும்பத்தினருடன் போனில் பேசி தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து குடும்பத்தினர் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர். அப்போது சகஊழியர்கள் அரிகிருஷ்ணன் பணி சுமையால் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிவித்தனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த குடும்பத்தினர் அனல்மின் நிலையத்துக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அனல்மின் நிலைய அதிகாரிகள், உறவினர்கள் 2 பேரை அழைத்து சென்று அனல்மின் நிலையத்தின் உள்ளே தேடினர். அப்போது அனல்மின் நிலையத்தின் ஒரு பகுதியில் அரிகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் அரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story