ஆற்றில் மூழ்கி என்ஜினீயர் பலி
திருவிடைமருதூர் அருகே ஆற்றில் மூழ்கி என்ஜினீயர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்;
திருவிடைமருதூர் மகாதானவீதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது55) என்ஜினீயரான இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் திருவிசநல்லூர் மாச்சாகுளம் முழுக்கு படித்துறை பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் குளிக்க சென்றார். இதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை தேடினா். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே அவரது குடும்பத்தினர் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் தீயணைப்பு துறையினர் மூலம் ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலை மகாலிங்கத்தின் உடல் ஆற்றில் கரை ஒதுங்கியது. இது குறித்து ேபாலீசார் நடத்திய விசாரணையில், மகாலிங்கம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது ெதரியவந்தது.
Related Tags :
Next Story