நாவலூர் அருகே 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் சாவு


நாவலூர் அருகே 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் சாவு
x

நாவலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரை அடுத்துள்ள ஏகாட்டூரில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கோவையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பிரனேஷ் (வயது 28) 7-வது மாடியில் வசித்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரனேஷ், வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டின் தடுப்பு இல்லாத பால்கனியில் தூங்கினார்.

நேற்று அதிகாலை பிரனேஷ் அடுக்குமாடி 7-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்துள்ளது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்பில் இருந்தவர்கள் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் விரைந்து சென்று பிரனேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story
  • chat