மது விருந்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் - மேலும் 3 பேர் கைது


மது விருந்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் - மேலும் 3 பேர் கைது
x

சென்னை அண்ணா நகரில் மது விருந்தில் என்ஜினீயர் பலியான சம்பவத்தில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் விடிய விடிய ஆடல், பாடலுடன் மது விருந்து நடந்தது. இதில் என்ஜினீயர்கள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மது விருந்தில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தைச் சேர்ந்த என்ஜினீயர் பிரவீன் (வயது 23) பலியானார். இதையடுத்து அனுமதி இன்றி செயல்பட்ட பாருக்கு சீல் வைத்த போலீசார், பார் மேலாளர்கள், மது விருந்துக்கு ஏற்பாடு செய்தவர் என 3 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அண்ணா நகரை சேர்ந்த விக்னேஷ் சின்னதுரை (33), கோடம்பாக்கத்தை சேர்ந்த மா ர்க் என்ற ரவீந்திரகுமா ர் (26), மடிப்பாக்கத்தை சேர்ந்த பவன் (34) ஆகிய மேலும் 3 பேரை அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.

1 More update

Next Story