பொறியியல் கல்லூரி மாணவர் மாயம்
காட்டுமன்னார்கோவிலில் பொறியியல் கல்லூரி மாணவர் மாயமானது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் ஓமாம்புலியூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மலையப்பன் மகன் சூர்யா (வயது 19). இவர் சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சூர்யாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர், சூர்யாவை கடந்த 26-ந்தேதி வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து வந்த சூர்யா நேற்று முன்தினம் திடீரென மாயமாகி விட்டார். இதனால் பதறிய பெற்றோர் மாயமான மகனை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். இருப்பினும் சூர்யாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாயமான மகனை கண்டு பிடித்து தரக்கோரி அவருடைய தாய் மணிமேகலை காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சூர்யாவை தேடி வருகிறார்கள்.