பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு..!


பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு..!
x

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லுாரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2023-24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மே 5 முதல் ஜூன்4-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் கடந்த 20-ம்தேதி நிறைவடைந்தது.


இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார். கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். தரவரிசை பட்டியல் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 2-ல் கலந்தாய்வு தொடங்குகிறது.


Next Story