என்ஜினீயரிங் ஆராய்ச்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயரிங் ஆராய்ச்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

பொத்தேரியில் என்ஜினீயரிங் ஆராய்ச்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் எழிலரசன் (வயது 23). இவர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரில் தனது நண்பருடன் தங்கி அதே பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் எழிலரசுடன் தங்கி இருந்த அவரது நண்பர் விக்னேஷ் பாபு கடந்த வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். எழிலரசன் மட்டும் தனியாக அறையில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் ஊருக்கு சென்ற விக்னேஷ் பாபு மீண்டும் நேற்று காலை தங்கி இருந்த அறைக்கு வந்த போது எழிலரசன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்த எழிலரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

எழிலரசனின் மணிக்கட்டு பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட காயம் இருந்ததால் மறைமலைநகர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து உண்மையிலேயே எழிலரசன் தானாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை அடித்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இறந்து போன எழிலரசன் எழுதி வைத்ததாக ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் எழிலரசன் தன்னால் ஆராய்ச்சி மேற்படிப்பு படிக்க முடியவில்லை ஆகையால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story