மதுராந்தகத்தில் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் படுகாயம் - 2 கால்களும் துண்டானது


மதுராந்தகத்தில் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் படுகாயம் - 2 கால்களும் துண்டானது
x

மதுராந்தகத்தில் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் படுகாயம் அடைந்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பன்னீர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் நேதாஜி (வயது 20). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேதாஜி தினமும் கல்லூரிக்கு மதுராந்தகத்தில் இருந்து ரெயிலில் சென்று வருகிறார்.

வழக்கம்போல நேற்று காலை மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த விழுப்புரம் பாசஞ்சர் ரெயிலில் ஏற முயன்றார். அவர் ஏறும் முன் ரெயில் புறப்பட்டது.

நோதாஜி ஓடி சென்று ரெயிலில் ஏற முயன்றார். அப்போது ரெயில் வேகமாக செல்லவே கைப்பிடி நழுவி ரெயில் பிளாட்பாரத்துக்கும் ரெயிலுக்கும் இடையே நேதாஜி விழுந்து விட்டார். இதில் அவரது 2 கால்களும் முழுவதுமாக நசுங்கி துண்டானது. அங்கு இரு்தவர்கள் சத்தம் போடவே உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த அவர் மீட்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story