பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து பொறியாளர்கள் ஆய்வு
பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து பொறியாளர்கள் ஆய்வு
கோயம்புத்தூர்
வால்பாறை
வால்பாறை பகுதியில் உள்ள 55 அரசு பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து பள்ளி கல்வி துறை உத்தரவின் பேரில் அனைவருக்கும் கல்வி இயக்க பொறியாளர்கள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க தலைமை பொறியாளர் பாலாஜி கூறுகையில், ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள கட்டிடங்களின் தரம், அவற்றின் நிலை, சற்றுச்சுவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் அந்தந்த பள்ளிகளில் செய்ய வேண்டிய பணிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்றனர்.
இந்த ஆய்வு பணியை பொறியாளர்கள் சுதாகர், தியாகராஜன், சிவக்குமார், கார்த்திக், வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story