பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை


பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை
x

முனைஞ்சிப்பட்டி பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

முனைஞ்சிப்பட்டி பஞ்சாயத்து பிள்ளையார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முனைஞ்சிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பி.இசக்கிதுரை தலைமை தாங்கினார். நாங்குநேரி வட்டார கல்வி அலுவலர் சங்கீதா, முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர் மாரியப்பன், வித்யாரம்பம் அறக்கட்டளை பிரபாவதி, சாந்தகுமாரி, வார்டு உறுப்பினர் கிளிண்டன் மற்றும் பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு கிரீடம் சூட்டி பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சிவசுப்பிரமணியன், உதவி ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story