விஜயதசமியில் மாணவர் சேர்க்கை: 'அ'கரம் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
விஜயதசமியில் மாணவர் சேர்க்கை: ‘அ’கரம் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
ஈரோடு
ஈரோட்டில் நேற்று விஜயதசமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கள்ளுக்கடைமேடுவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த விஜயதசமி பூஜையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். அர்ச்சகர் தங்க மோதிரத்தில் தேன் நனைத்து குழந்தைகளின் நாவில் வைத்து கல்வி நன்றாக வர பூஜை செய்தார். தொடர்ந்து ஒரு தட்டில் அரிசியை பரப்பி அதில் குழந்தைகளின் கைவிரலை பிடித்து 'அ'கரம் என தமிழ் முதல் எழுத்தை எழுதி கல்வியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலிலும் விஜயதசமி சிறப்பு பூஜை நடந்தது. இதுபோல் ஈரோட்டில் உள்ள அனைத்து தனியார் மழலையர் பள்ளிக்கூடங்களிலும் விஜயதசமி சேர்க்கை நேற்று நடந்தது. மேலும் ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அங்கன்வாடி மற்றும் மழலையர் பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது.
Next Story