காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம்
x

காஞ்சீபுரம் அடுத்த திருப்புலிவனம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி சிறப்பு ஊட்டச்சத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம்

பின்னர் அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 940 மையங்களில் உள்ள 6 மாதத்திற்க்கு உட்பட்ட 413 குழந்தைகளுக்கும் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள 1086 பேருக்கும் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இந்த ஊட்டச்சத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வழங்கி ஆரோக்கியமான குழந்தைகளாக வளர்த்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இதில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story