அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
மானாமதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
மானாமதுரை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரையில் இருந்து தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் காரில் சென்றார். அப்போது மானாமதுரை பைபாஸ் ரோட்டில் அவருக்கு சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி, எம்.எல்.ஏ ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம், யூனியன் தலைவர் லதாஅண்ணாதுரை, துணைத் தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராஜாமணி, அண்ணாதுரை, நகர செயலாளர் பொன்னுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன் மற்றும் நகர் மன்ற கவுன்சிலர்கள், யூனியன் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.