தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறுதொழில் தொடங்குவதற்கான அரசு திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார். மேலும் தென்காசி மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் குமார், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க கள ஒருங்கிணைப்பாளர் சண்முக மாரியப்பன் ஆகியோர் சிறுதொழில் தொடங்குவதற்கான ஆலோசனையை வழங்கினார்கள். இதில் கல்லூரி ஆலோசகர் பாலசுப்பிரமணியன், முதல்வர் ரமேஷ், அனைத்து துறை தலைவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேராசிரியை வசந்தி வரவேற்று பேசினார். ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் செய்து இருந்தார். முடிவில், பேராசிரியர் யோகலிங்கம் நன்றி கூறினார்.