தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி


தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
x

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

வேலூர்

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தொழில் சார் சமூக வல்லுநர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. தொழில் மேம்பாட்டுத்துறை வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாநில அலுவலர் முருகானந்தம், சிறு, குறு தொழில் மேம்பாட்டுத்துறை துணை இயக்குநர் வித்யா, வேலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், உதவி இயக்குனர் சுரேஷ், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் புத்தாக்க மேம்பாட்டு நிறுவன பயிற்சி மேலாளர் தில்லைநாயகம், பயிற்சியாளர்கள் சரண்யா, கார்த்திக், திட்ட அலுவலர் (பொறுப்பு) அன்பரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story