தொழில் முனைவோர் மண்டல மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


தொழில் முனைவோர் மண்டல மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x

திருப்பூரில் தொழில் முனைவோர் மண்டல மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருப்பூர்,

திருப்பூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தொழில்முனைவோர் திருப்பூர் மண்டல மாநாடு திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், பிணையில்லாத கடன் வசதிக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், தாமதமான வரவினங்களுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளம், நாரணாபுரம் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் ஆகிவை இடம்பெற்று உள்ளது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முனைவோர் மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருந்தும்.

பெருந்தொழில்களை மட்டும் நம்பி இருக்காமல் சிறு, குறு, நடுத்தர தொழில் ஊக்கமடைய வேண்டும் என அரசு விரும்புகிறது. தொழில்கள் சென்னை அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மட்டுமே மையப்படுத்தி அமைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. ஒவ்வொரு மாவட்ட தொழில் மையத்திலும் ஒரு ஏற்றுமதி வழிகாட்டி மையம் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story