அரூர் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா


அரூர் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா
x
தினத்தந்தி 7 Jun 2023 1:15 AM IST (Updated: 7 Jun 2023 6:22 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்

அரூர் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கீரைப்பட்டி அரசு பள்ளி மற்றும் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வனப்பகுதியில் தீ விபத்தை தடுக்கும் வகையில் தீத்தடுப்பு முறைகள், வனவிலங்குகளை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலர் சரவணன், வனச்சரக அலுவலர் நீலகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா சங்கர் மற்றும் வனத்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story