சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Jun 2023 1:15 AM IST (Updated: 15 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழா மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் மதியரசி குழந்தை தொழிலாளர் தின எதிர்ப்பு தின உறுதிமொழியை வாசித்தார். சுற்றுச்சூழல் குறித்து பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியை கீதா விளக்கி பேசினார்.

இதையடுத்து கொய்யா, சீதா, எலுமிச்சை மற்றும் மூலிகைகளான பூனை மீசை, ரணகள்ளி ஆகிய மரக்கன்றுகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஆசிரியை சுப்புலட்சுமி, ராணி சுசீலா, சாஜிதா பானு சரண்மா மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story