சட்டசபையில் கருப்பு சட்டையில் ஈபிஎஸ் : வெள்ளை சட்டையில் ஓபிஎஸ்...!


சட்டசபையில் கருப்பு சட்டையில் ஈபிஎஸ் : வெள்ளை சட்டையில் ஓபிஎஸ்...!
x

தமிழ்நாடு சட்டசபையில் இன்று சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமர்ந்த நிலையில் சட்டசபை பரபரப்பாக காணப்பட்டது.

சென்னை,

நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முதல்நாளில் கூட்டத்தின் முதல் நாளிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையால் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறின.

இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான இரங்கல் குறிப்பை படித்தார். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியது முதலே அவை மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு துறை அமைச்சர்கள் விரிவாக பதிலளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவு எடுக்காததை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை சபாநாயகர் அப்பவுப் ஏற்றுக்கொள்ளாததால் எடப்பாடி தரப்பு அதிமுகவினர் இன்று கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்து இருந்தனர். ஆனாலும் அவைக்கு உள்ளே எடப்பாடி இன்று அமளியில் ஈடுபடவில்லை. கேள்வி நேரத்தின் போது அமளியில் ஈடுபடாமல் எடப்பாடி அமைதியாக ஓ பன்னீர்செல்வம் அருகே அமர்ந்து இருந்தார். கேள்வி நேரம் முடியும் வரை எடப்பாடி எதுவும் சொல்லாமல், அமளி செய்யாமல், தனது இருக்கையிலேயே அமைதியாக இருந்தார்.

ஓபிஎஸ் அருகிலேயே இருந்ததால் அந்த பக்கம் திரும்பாமல் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தார். இருவரும் அருகருகே அமர்ந்தபடி ஆளுநர் உரையை கவனித்துக் கொண்டு இருந்தனர். முக்கியமாக எடப்பாடி இன்று மிகவும் இறுக்கத்துடன் இருந்தார். பக்கத்திலேயே ஓபிஎஸ் இருக்கிறார். இப்போது அவர்தான் தனக்கு பரம எதிரி என்பதால் எடப்பாடி என்ன செய்வது என்று தெரியாமல் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு இருந்தார். இன்று எடப்பாடி - ஓபிஎஸ் அருகருகே அமர்ந்து இருந்தாலும் இருவரும் ஒரு நிமிடம் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. எடபபடி இறுக்கமான முகத்துடன் காணப்பட்டாலும் ஓபிஎஸ் முகத்தில் மாற்றத்தை காட்டிக்கொள்ளவில்லை.. ஓபிஎஸ் கொஞ்சம் இயல்பாக இருந்தார். இவர்களின் நடவடிக்கைகள் சட்டசபையில் கவனிக்கப்பட்டது.


Next Story