சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு


சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
x

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அரியலூர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பெரம்பலூரில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும், அரியலூரில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் கலைவாணி தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதி மொழியை ஏற்று கொண்டனர். இதேபோல் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் போலீசாரும் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றனர்.

1 More update

Next Story