சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு


சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
x

கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சமத்து நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் அலுவலக ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், வருவாய் அதிகாரி சிவபிரியா, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ள புத்தக திருவிழா தொடர்பான துண்டு பிரசுரங்களை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வினியோகம் செய்தார்.


Next Story