மாணவர்களுக்கு குதிரையேற்ற பயிற்சி- அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்


மாணவர்களுக்கு குதிரையேற்ற பயிற்சி- அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்
x

மாணவர்களுக்கு குதிரையேற்ற பயிற்சியை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே விசாலயங்கோட்டையில் உள்ள கலாம்கவி கிராமத்தில் சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கலாம் கவி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கதொடக்க விழா மற்றும் மாணவர்களுக்கான குதிரையேற்ற பயிற்சி பள்ளி தொடக்க விழா நடைபெற்றது கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சேர்மன் சேது குமணன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். பேராசிரியை விஷ்ணு பிரியா வரவேற்றார். அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினை தொடங்கி வைத்து, குதிரை ஏற்ற பயிற்சியினை தொடங்கி வைத்து பேசும்போது, கல்லூரியில் நீண்ட காலமாக வேலை பார்த்து வரும் 25 நபர்களுக்கு தலா 5 பசுக்களை வழங்கி அவர்களைபால் உற்பத்தியாளர்களாக்கி அவர்களுக்காக கூட்டுறவு சங்கம் தொடங்கி அவர்களை பொருளாதாரத்தில் தற்சார்புடையவர்களாக மாற்றி இப்பகுதியின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து சேவையாற்றி வரும் வேளாண் ஆராச்சி மையத்தை பாராட்டுகிறேன். ஆராய்ச்சி மையத்தின் சேவை தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருக்கிறது. குதிரையேற்ற பயிற்சி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு அவர்களது இலக்கை அடைய உறுதுணையாக இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை 9-வது பிரிவின் காமாண்டிங் ஆபீசர் ரஜனீஷ் பிரதாப், கல்லல் யூனியன் சேர்மன் சொர்ணம் அசோகன், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு. அசோகன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், டாக்டர் திருப்பதி கல்லல் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story