மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள்
x

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள்

திருவாரூர்

முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார வள மையத்தின் கீழ் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆயத்த பயிற்சி மையத்தில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மையத்தில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், இல்லம் சார்ந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் உபகரண பெட்டியும், நடை உதவி உபகரணங்களையும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சவுந்தரராஜன் வழங்கி பேசினார். இதில் வட்டார கல்வி அலுவலர்கள் சிவகுமார், ராமசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் நித்தையன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story