செஞ்சி அருகே மலைப்பகுதியில் 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு போலீசார் நடவடிக்கை
செஞ்சி அருகே சாராய வேட்டையில் ஈடுபட்ட போலீசார் மலைப்பகுதியில் 400 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.
விழுப்புரம்
செஞ்சி,
செஞ்சி அடுத்த போத்துவாய் கஞ்சூர் மலைப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, நல்லாண் பிள்ளைபெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கவுரிசங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் போத்துவாய் கஞ்சூர் மலைப்பகுதியில் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக மூலப் பொருட்களுடன் பேரல்களில் 400 லிட்டர் சாராய ஊரல் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பேரல்களில் இருந்த சாராய ஊறலை கீழே கொட்டி அழித்ததோடு, அங்கு ஊறலை அமைத்த நபர்கள் யார்? என விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story